“தவடையில் அடிப்பேன்”... அரசு அதிகாரியை செல்போனில் மிரட்டிய தவெக அமைச்சரால் பரபரப்பு...!
அரசு அதிகாரிக்கு போன் செய்து மக்கள் முன்னிலையில் மிரட்டிய தவெக அமைச்சரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது
“அந்த அதிகாரி நேரில் இருந்தால் தவடையில் அடிப்பேன்”, “கன்னியாகுமரிக்கு பணியிட மாற்றம் செய்து விடுவேன்” என நன்றி தெரிவிக்கச் சென்ற இடத்தில் மின்வாரிய அதிகாரியை கடுமையாகக் கண்டித்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.வீ. இரஞ்சித்குமார், தற்போது தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குண்டுகுளம், விப்பேடு, நரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நரப்பாக்கம் பகுதியில் நன்றி தெரிவிக்க வந்த அமைச்சர் ஆர்.வீ. இரஞ்சித்குமாரிடம், அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு, தனக்குக் கீழ் பணிபுரியும் செயற்பொறியாளர் பாண்டியராஜன் சரிவர பணியாற்றவில்லை என்றும், அவர் மீது ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளதால் விளக்கக் கடிதம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்புப் பொறியாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!
இதையடுத்து, “அவரை கன்னியாகுமரிக்கு பணியிட மாற்றம் செய்து விடுவேன்” என அமைச்சர் எச்சரித்தார். மேலும், பொதுமக்களிடம் அந்த செயற்பொறியாளர் நேரில் இருந்தால் “தவடையில் அடிப்பேன்” என அமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!