×
 

ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியை தலைவர் வேல்முருகன் முக்கிய வலியுறுத்தலை முன் வைத்துள்ளார்.

நாடு முழுவதும் 2 மாதங்களில் 3-வது முறையாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். மேலும் விலைவாசி உயரும் அபாயம் இருப்பதால் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால், காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். 

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது என்றும் இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதால், வேறு வழியின்றி எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது எனவும் வேல்முருகன் தெரிவித்தார். 

இதையும் படிங்க: எரிக்காற்று உருளை விலை உயர்வு... மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் வைத்த கோரிக்கை..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினார். பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: ஆளுங்கட்சி தவெகவா? அண்ணாமலையா? தாவுவதற்கு தயாராகும் நிர்வாகிகள்?! தப்புமா அதிமுக?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share