நெகிழ்ச்சி!! தூய்மை பணியாளர்களை இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்த அமைச்சர்... 2 ஆயிரம் பேருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்...!
மழை என்றும் வெயில் என்றும், எந்த சூழ்நிலையிலும் இரவு பகல் பாராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நெகிழ்ச்சிப் பேச்சு
மழை என்றும் வெயில் என்றும், எந்த சூழ்நிலையிலும் இரவு பகல் பாராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நெகிழ்ச்சிப் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சுமார் 2000 -க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள், புத்தாடைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி 2 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, உங்களுடைய பணி அளப்பரியது, நான் எத்தனை முறை உங்களை பாராட்டினாலும், அது பொருந்தும் அந்த அளவுக்கு நீங்கள் மழை என்றும், வெயில் என்றும், எந்த சூழ்நிலையிலும் இரவு பகல் பாராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டிலேயே ஒட்டன்சத்திரம் நகராட்சி தூய்மையான நகராட்சி பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறது வருகின்ற ஆண்டு முதலிடத்தை பிடிக்க வேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசினார்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் பணிகள்... ஆட்சி நமதே! வேகம் காட்டும் திமுக...!
தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு செயல்படுத்த நினைத்த திட்டங்களை அவர்கள் வழியில் நமது முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருவதாக தெரிவித்தார். தூய்மை பணியாளர்களின் பணிகளையும் சேவைகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி அவர்களுடன் கூட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. புளியம்பட்டி, கொழுமம் கொண்டான், கள்ளிமந்தயம், மரிச்சிலம்பு, வாகரை உள்ளிட்ட 38 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபத் திருநாளை முன்னிட்டு புத்தாடைகள், மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு மற்றும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
இதையும் படிங்க: எடப்பாடியின் instagram அரசியல்… திமுகவை விமர்சிச்சா பெரிய ஆளா? பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்…!