அடிதூள்...!! “8000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு”... கெத்து காட்டும் அறநிலையத்து துறை அமைச்சர் சேகர்பாபு...!
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 8,119 கோடி ரூபாய் மதிப்பிலான 8000 ஏக்கர் பரப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 13 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றதும், கடந்த 27 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் தொடங்கின. இன்று காலை எட்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் பூஜிக்கப்பட்ட புனித நீரால் கோவில் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் காஞ்சி மடாதிபதி விஜயந்திரர், பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் 1557 கோடி ரூபாய் மதிப்பிற்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளார்கள். இதன் மூலம் 12,000 திருக்கோயில்கள் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது என்றும், 8,119 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் இதன் பரப்பளவு சுமார் 8000 ஏக்கருக்கு மேல் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இன்று மட்டும் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 31 கோவில்களில் குடமுழக்கு விழா நடைபெறுகிறது என்றும், இதுவரை இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 3896 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும் ஜனவரி மாதத்தின் இதன் எண்ணிக்கை நாலாயிரத்தை கடந்து விடும் என்றும் அமைச்சர் சேகர்பாபு மேலும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாமரை மலரணுமாம்... அரசியல் பேசிய அர்ச்சகர்... பூந்து விளாசிய சேகர்பாபு...!
தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ. 5,812 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2021 மே முதல் 2022 மார்ச் வரை, 133 கோயில்களுக்குச் சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. நிலங்கள் மட்டுமல்லாமல், குளங்கள், கட்டிடங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள் போன்ற சொத்துக்களும் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பரிதாப பலி..!! இபிஎஸ் இரங்கல்..!!