மூத்த குடிமக்களுக்கு இனி கவலையே வேணாம்... திமுக ஆட்சியில வந்த வரப்பிரசாதம்! அமைச்சர் சொன்ன ஸ்பெஷல் திட்டம்..!
மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்படும் உண்டு உறைவிட குடியிருப்புகள் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கபாலீஸ்வரர் கோயில் கட்டுமான பணிகளை விரைவு படுத்தவும் கட்டுமான பணிகள் நேர்த்தியாக இருப்பது தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுமான பணிகள் கோரிக்காடு சீராகக் கூட்டங்கள் மேற்கொள்ளும் போது மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்படும் உண்டு உறைவிட குடியிருப்புகள் முன்னேற்றத்தைப் பற்றியும் அதன் கட்டுமான வசதிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள அழுத்தம் தந்து கொண்டிருப்பதாக கூறினார்.
அதன்படி கொளத்தூர் ராஜாஜி நகர் பகுதியில் கட்டப்படும் மூதூர் உண்டு உறைவிட குடியிருப்பு மற்றும் நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் சார்பில் கட்டப்படும் மூத்தோர் உண்டு உறைவிட குடியிருப்பு மற்றும் பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் கட்டப்படும் மூத்தோர் உண்டு உறைவிட குடியிருப்பு பணிகளை கள ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொன்னா புரிஞ்சுக்கோங்க! கிளாம்பாக்கம் சென்னைக்கு பொக்கிஷம்.. தெளிவாக விளக்கிய சேகர்பாபு..!
இந்த குடியிருப்புகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு உள்ளாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் இதில் ஒரே வேலையாக 100 மூத்த குடிமக்கள் தங்கி பயன்பெறும் வகையில் குறிப்பாக உடற்பயிற்சி, மருத்துவ வசதி, உணவு, பொழுதுபோக்கு, புத்தகங்கள், கழிப்பிட வசதி, உதவியாளர்கள், நடைபாதைகள் மற்றும் நடைபாதைகளின் மீன் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். இந்த குடியிருப்புகள் மூத்த குடிமக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும் இந்த குடியிருப்புகள் முற்றிலும் இலவசம் எனவும் தெரிவித்தார். பெரிய செல்வந்தர்கள் இந்த பணிகளுக்காக சிஎஸ்ஆர் மூலம் நிதி கொடுத்து வருவதாகவும் கூறினார்.
திருச்செந்தூர் முருகர் கோவில் பொருத்தவரை குடமுழுக்கு நிகழ்விற்கு லட்சோப லட்ச மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து காண்பதற்காக பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேல் எடுத்து சுற்றி வந்தும் வெல்ல முடியவில்லை... பாஜகவை விளாசிய அமைச்சர் சேகர்பாபு!!