வக்பு வாரிய சொத்துக்கள்... சாட்டையைச் சுழற்ற ஆயத்தமாகும் ஷாஜகான்... அவரே சொன்ன முக்கிய தகவல்...!
கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன் எனக்கூறினார்.
வக்பு வாரிய சொத்துக்கள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் .
கும்பகோணம் புதிதாக பொறுப்பேற்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் அமைச்சர் பொறுப்பேற்றதும் இன்று முதல் முறையாக கும்பகோணம் வந்தார். புதிதாக பொறுப்பேற்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் அமைச்சர் பொறுப்பேற்றதும் முதல் முறையாக இன்று கும்பகோணம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷாஜகான், சிறுபான்மை மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் பாதுகாத்திடும் வகையில் நாளை மாலை சென்னையில் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வரிடம் கூறி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!
மேலும் வக்பு வாரிய சொத்துக்கள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன் எனக்கூறினார்.
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பிரச்சினை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் மேல இராமநல்லூர் வழியாக கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் IUML கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஷாஜகான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதையும் படிங்க: இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!