×
 

செவிலியர்கள் பிரச்சினைக்கு காரணமே அதிமுக தான்... அமைச்சர் மா.சு. கடும் குற்றச்சாட்டு...!

செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் சேப்பாக்கம் சிவானந்த சாலை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாநகர பேருந்து மூலமாக ஏற்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தின் நடைமேடை 9-ல் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 730 செவிலியர் கைது செய்யப்பட்ட திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செவிலியர் சங்கத்துடன் அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செவிலியர் சங்க பொதுச் செயலாளர் மிரட்டும் தொனியில் அமைச்சர் பேசுவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த திமுகவுக்கும் நேரம் நெருங்கிடுச்சு... அதிமுக கடும் விமர்சனம்...!

செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஒப்பந்த செவிலியர், பணியாளர் முறையை கொண்டுவந்ததே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்று தெரிவித்தார். போராடுவது என்பது அவரவர்களின் உரிமை என்று கூறினார். பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் செவிலியர்களின் பிரச்னைக்கு காரணமே அதிமுகதான் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக, ஒத்துஊதும் அதிமுக..! திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share