மாநில வளர்ச்சியில் தமிழகம் சாதனை... முதல்வர் தலைமையில் சிறந்த ஆட்சி... தங்கம் தென்னரசு பெருமிதம்...!
முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அவர் விளக்கமளித்தார். எத்தனை சதவீதம் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறித்தும் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து என்னென்ன முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறித்தும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 31. 19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் சிறப்பான முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பதினாறு சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில வளர்ச்சியில் சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவித்தார். மேலும் முதலீட்டாளர் மாநாடுகளின் மூலம் 11.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலநிலை முன்னெச்சரிக்கையில் தமிழ்நாடு நம்பர்.1... முதல்வர் ஸ்டாலின் உரை...!
இந்த வளர்ச்சியில் உற்பத்தி துறைக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் இரு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் அமைச்ச தங்கம் தென்னரசு கூறினார். மேலும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 47 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 200 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் பொருளாதாரம்... அசாத்திய சாதனை..! மார்த்தட்டும் திமுக...!