×
 

மாட்டுக் கறியா.? அமைச்சரவையே பார்க்க முடியாது..! வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி பகிரங்க எச்சரிக்கை..!

சமூக நீதி விடுதிகளில் மாணவர்களுக்கு மாட்டுக்கறி வழங்கும் விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக அரசின் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பை விபரீதமான முடிவாகக் கருதி, உடனடியாக அதை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின் கீழ் ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக, மாதாந்திர உணவுக் கட்டணம் வெறும் 150 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

 பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தனது தனிப்பட்ட விருப்பத்தை சில மாணவர்களின் கோரிக்கையாகக் காட்டி பொது விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவன் பாரதிதாசன் விவகாரம்.. அரசியல் செய்கிறது திமுக..!! வன்னிஅரசு பகீர் குற்றச்சாட்டு..!!

இந்த நிலையில் அமைச்சர் வன்னியரசு மாட்டுக்கறி தொடர்பான தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை அதை அமல்படுத்தும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசையா.? டாஸ்மாக்கை விட்டொழி..! கிருஷ்ணசாமி தாக்கு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share