×
 

பெற்றோர்களே உஷார்...!! - தமிழகத்தில் விரைவில் வருகிறது புதிய சட்டம்... அமைச்சர் வன்னியர அதிரடி..!

ஐடி ஊழியர் கவின் கொலை சம்பவம் ஓராண்டு நினைவு தினம். அமைச்சர் வன்னியரசு வீட்டிற்கு சென்று நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஆணவகொலைக்கு எதிரான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்

கடந்த வருடம் இதே நாளில் மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கவின் என்ற ஐடி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை சிபிசிஐடி வசம் நடந்து வந்தது. 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 29ஆம் தேதி இந்த கொலை சம்பவத்தில் அந்த பெண்ணின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியும் தொடர்பு இருந்ததாக கூறி அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. 

இதையும் படிங்க: AC கோச் தான் SAFE... திட்டம் போட்டு கஞ்சா கடத்திய வட மாநிலத்தவர்கள்... தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்..!!

இதற்கிடையில் இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

இதில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் விசிக நிர்வாகிகள் நேரில் வருகை தந்து கவின் தாய் மற்றும் தந்தையருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  அதைத் தொடர்ந்து புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது கவினின் தாய் கவினின் புகைப்படத்தை பார்த்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

அதைத்தொடர்ந்து வீட்டின் முன்பு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் வன்னி அரசு, பவானிசாகர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினரும் கவினின் பெரியம்மாவுமான தமிழ்ச்செல்வி, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். 

தொடர்ந்து கவினின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர். 

இந்த நினைவேந்தல் கூட்டத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிய அரசு பேசுகையில் இந்த ஆணவ கொலை சம்பவம் நடந்தது மிகவும் வேதனை தருகிறது மீண்டும் வருங்காலங்களில் இது போல் நடக்காமல் இருக்க கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து கவினின் பெரியம்மாவும் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்ச்செல்வி பேசுகையில், எனது சகோதரியின் மகனின் இது போல் இனி எவருக்கும் நடக்கக்கூடாது என்று மேடையிலேயே அவர் கண்ணீர் விட்டார்.

அதைத் தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த வருடம் இதே நாளில் நாங்கள் எங்கள் தலைவர் அறிவுறுத்தல் பேரில் கவினின் குடும்பத்திற்காக உறுதுணையாக இருந்தோம். அவரது கொலை வழக்கு தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனி இதுபோல் ஒரு தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆணவ கொலைக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதற்கான பணிகள் நீதிபதி தலைமையில் நடந்து வருகிறது. தற்போது அரசு அதிகாரிகளிடம் இது குறித்த விளக்கங்கள் கேட்கப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்த முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீலகிரியை சூழ்ந்த 'கருப்புப்படை'..!! மர்ம பூச்சியால் பாதிப்பா..!! பதறும் மக்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share