நெசவாளர் நெஞ்சம் குளிர...! முதல்வர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. புகழ்ந்து வரவேற்ற அமைச்சர் விஜயலட்சுமி..!!
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முதல்வர் விஜயை வரவேற்று அமைச்சர் விஜயலட்சுமி பேசினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் அலை ஒன்றை உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கரூருக்கு செல்கிறார். இது கடந்த ஆண்டு ஏற்பட்ட சோக சம்பவத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாக உரையாடும் உணர்ச்சிபூர்வமான தருணமாகவும் அமைந்துள்ளது.
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடத்திய பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல் இருந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் பின்னணியில் இன்றைய கரூர் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் அரசு பணி வழங்க உள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு அரசு பணி வழங்குவதற்கு தடை இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இது முதல்வர் விஜய்க்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்று இருக்கிறார். அவரை பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வரவேற்றார். முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை கொடுத்து வரவேற்றார். அப்போது நெசவாளர் நெஞ்சம் குளிர கரூருக்கு வருகை தந்துள்ள முதல்வரை வரவேற்பதாக கூறினார். மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் எம்எல்ஏக்களை வரவேற்று பேசினார்.
இதையும் படிங்க: கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!