×
 

கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவுக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் என்றும் ஆபத்தான முன்னுதாரணம் எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை என்றும் சாடினார். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது என்றும் ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல என்றும் திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமை எனவும் தெரிவித்தார். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சசிகலா, TTV தினகரன் ரீ-என்ட்ரி..? WAIT & SEE..! அரசியல் களத்தை குலுக்கிய கே.சி. கருப்பண்ணன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share