வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க. அழகிரியின் மகள்...! பகீர் கிளப்பும் காட்சிகள்..!!
வங்கி மேலாளரை முக அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மு.க. அழகிரி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் இரண்டாவது மகன் என்ற அடையாளத்துடன், மதுரை அரசியலின் வலிமைமிக்க தலைவராக உருவெடுத்த அவரது மூத்த மகள் கயல்விழி அழகிரி. கலைஞர் குடும்பத்தின் பேரக்குழந்தையாகப் பிறந்த அவர், அரசியல் பின்னணியுடன் வளர்ந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பப் பாசத்தையும், சமூக ஈடுபாட்டையும் சமநிலைப்படுத்தி வருபவர். கயல்விழி, அழகிரியின் மனைவி காந்தி அழகிரியின் மூத்த மகள்.
தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு, தலைமைச் செயலகம் வருகை, முதலமைச்சர் விஜயுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் அவரை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட புதிய அரசியல் சூழலில் ஈடுபாடு காட்டும் வாய்ப்புகள், மதுரை மேயர் பதவி உள்ளிட்ட ஊகங்கள் அவரைச் சுற்றி எழுந்துள்ளன.
மதுரைப் பகுதியில் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி புதிய பொறுப்புகளை ஏற்கும் திசையில் அவர் நகர்வதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அடையாறு எஸ்பிஐ வங்கி மேலாளரை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திமுகவில் நீக்கப்பட்ட 150 பேருக்கு மீண்டும் வாய்ப்பு! மு.க.ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! புதிய அரசியல் நகர்வு!
வங்கியின் லிப்ட் பழுது தொடர்பாக பேச வந்திருந்த கயல்விழி வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. எஸ்பிஐ வங்கி முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரியின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மேலாளர் அறைந்த முக அழகிரியின் மகள் கயல்விழி மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மிரட்டல் நடந்ததா..? குதிரை பேர வழக்கு... தீவிர விசாரணை..! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!