×
 

வாங்க முதல்வரே! திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ... மக்கள் உற்சாக வரவேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்திய நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டு உள்ளார். கள ஆய்விற்காக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்க உள்ளார். 

வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். இதை அடுத்து, கோவையில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைக்க உள்ளார்.

மேலும் மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அவர் திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நாளை பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாய பெருமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: மேயர் பிரியாவுக்கு ஏதாச்சு பேச தெரியுதா? சேகர்பாபுவ நாங்க கேட்டோமா? கொந்தளித்த தூய்மை பணியாளர்கள்

ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதிகளிலேயே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் கள ஆய்வு செய்ய செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதன் காரணமாக கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உடல்நிலை தேறியதால் முதலமைச்சர் ஸ்டாலின் பல ஆய்விற்காக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். அப்போது, வழிநெறிகளும் காத்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: எல்லாரும் போராடுறாங்க! எதுக்கு இந்த விளம்பரம் ஆட்சி? விளாசிய TTV

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share