ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கற்பனை காட்சிகளை வெளியிடவே 10 ஆண்டுகளாகிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டது. 2018 டிசம்பரில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இது விமர்சனம் செய்துள்ளார். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்து விட்டார்களா., இதற்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.
மதுரைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று சென்று பார்த்தாரா என்று நான் கேட்டிருந்தேன்., அதற்கு பதிலாக கற்பனை காட்சிகளை உருவாக்கிய அளித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்