×
 

இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

தொகுதி மறு வரையறை மசோதா தோல்வி அடைந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொகுதி மறு வரையறை மசோதா தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில், தொகுதி மறு வரையறை துரோகிகளை அடையாளம் காட்டி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 2051 வரை தொகுதி மறு வரையறை கொண்டு வருவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். தற்போதைய தொகுதி எண்ணிக்கை அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி டெல்லியின் ஏஜென்ட் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருப்பதாக கூறினார். தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார். தொகுதி மறு வரையறை என்ற கருப்பு சட்டத் திருத்த நகலை எரித்து தீ பரவட்டும் என்று சொன்னேன் என்றும் அது நாடாளுமன்றத்தில் பரவியதாக தெரிவித்தார். பழைய திமுக என்றால் என்ன என கேட்ட அரைவேக்காடுகளுக்கு இதுதான்டா திமுக என நேற்று காட்டுகிறோம் என முதல்வர் கூறியுள்ளார்.

தொகுதி மறு வரையறை என்ற பெயரில் முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாக கொண்டு வந்த சட்டத்தை தோற்கடித்திருப்பதாக தெரிவித்தார். பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக மாற்ற முயன்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் இட ஒதுக்கீடு..! திமுகவின் தனிநபர் மசோதா..! மக்களவையில் நோட்டீஸ்..!!

தொகுதி மறு வரையறையில் நண்பர்கள் யார் துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டி இருப்பதாக தெரிவித்தார். புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாக பேசுகிறது என்றும் நமது வெற்றி தொடரட்டும் எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு தெற்கு என பிளவு ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பாஜக பெற போகும் தோல்விக்கான தொடக்கம் இது என்றும் தெரிவித்தார்.

தெளிவான உணர்வுகளை வெளிப்படுத்திய சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். பினராய் விஜயன், டி கே சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். தொகுதி மறு வரையறை ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையை அப்போதை தொடங்கியதாகவும் தெரிவித்தார். மாநில முதல்வர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து கருப்பு சட்டை அணிந்து கருப்பு சட்ட நகலை கொளுத்தினோம் எனவும் கூறினார். 

இதையும் படிங்க: பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share