×
 

திராவிட மாடல் 2.0... ஸ்டாலின் STATEMENT ரெடி..!! முதல்வரின் சர்ப்ரைஸ்..!

ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான அறிவிப்பு வெளியிட இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய அறிக்கையை Stalin Statement enra பெயரில் விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தற்போதைய ஆட்சிக் காலத்தில் அடைந்த சாதனைகளைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மேலும் தீவிரமான வளர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் ஒரு முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டை இந்தியாவில் முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான "திராவிட மாடல் 2.0" என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி வருகிறார். 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது, 2031ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் முதலிடத்தைப் பிடிப்பது போன்ற இலக்குகளை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தப் பின்னணியில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான விரிவான வளர்ச்சித் திட்ட அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஸ்டாலின் அறிக்கை என்பது வெறும் அரசியல் அறிவிப்பு மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், தொழில் முதலீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேளாண்மை மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிட்ட இலக்குகள், நிதி ஒதுக்கீடுகள், கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான வரைபடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி... விஜய் விமர்சனத்திற்கு சேகர்பாபு பளீச் பதில்..!!

இது தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பில் மார்ச் 6 அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் என்று கூறினார். 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான Stalin Statement-ஐ அறிவிக்க இருக்கிறேன் என்றார். திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் என்றும் உங்கள் அனைவரின் ஆதரவோடு எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து போதுமா? தமிழ்நாட்டை கொலை கூடாரமாக்கிய டாஸ்மாக் மாடல் அரசு... வானதி சீனிவாசன் தாக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share