2026 தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துங்க... முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை...!
உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் காரைக்குடி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, தொகுதி வாரியாக பிரச்சினைகளையும் தேவைகளையும் ஆய்வு செய்து வருகிறார். இந்தக் கூட்டங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், திமுகவின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், மக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடத்தப்படுகின்றன.
உடன்பிறப்பே வா என்ற தலைப்புடன் நிர்வாகிகளுடன் நடக்கும் ஒன் டூ ஒன் ஆலோசனையில் தொகுதி பிரச்னைகள், தேர்தல் முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்து வருகிறார். நூறு தொகுதிகளை தாண்டி நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசித்து வருகிறார். அதுமட்டுமில்லாத முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: அரியணை நமக்கு தான்... அலர்ட்- ஆ இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை...!
சமீபத்தில் அதிமுகவினருடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஒன்றிய செயலாளர் ஒருவரை பதவியில் இருந்து நீக்கம் செய்திருந்தார். ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி தடத்தை பதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், இன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இது போதும்யா... முதல்வரிடம் கண்கலங்கி நின்ற திமுக ஒன்றிய செயலாளர்...!