×
 

இது போதும்யா... முதல்வரிடம் கண்கலங்கி நின்ற திமுக ஒன்றிய செயலாளர்...!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டபோது திமுக ஒன்றிய செயலாளர் கண்கலங்கி நின்றார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளை திமுக தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, தொகுதி வாரியாக பிரச்சினைகளையும் தேவைகளையும் ஆய்வு செய்து வருகிறார். இந்தக் கூட்டங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், திமுகவின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், மக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடத்தப்படுகின்றன. 

உடன்பிறப்பே வா என்ற தலைப்புடன் நிர்வாகிகளுடன் நடக்கும் ஒன் டூ ஒன் ஆலோசனையில் தொகுதி பிரச்னைகள், தேர்தல் முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ஓட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

ஒன் டு ஒன் ஆலோசனையின் போது முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒன்றிய செயலாளர் அழுது உள்ளார். அவர் அழுவதை பார்த்து ஏன் அழுகிறீர்கள் என்று முதலமைச்சர் கேட்டுள்ளார். தனது தந்தை 1967 முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார் என முதலமைச்ரிடம் ஒன்றிய செயலாளர் கூறினார். அவர் உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று கூறினார். 

இதையும் படிங்க: பட்டப் பகலில் மாணவி கொலை... ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு இருக்கு... EPS ஆவேசம்..!

உடனே தொலைபேசி வாயிலாக அழைத்து ஒன்றிய செயலாளர் தந்தையிடம் நாளை அறிவாலயம் வருமாறு அழைத்துள்ளார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தந்தையை முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்தவுடன் ஒன்றிய செயலாளர் கண்கலங்கி அழுதார். உணர்ச்சிவசப்பட்டு அழுத ஒன்றிய செயலாளரை முதலமைச்சர் ஸ்டாலின் தேற்றினார்.

இதையும் படிங்க: அதிமுகவினருடன் தொடர்பு… திமுக ஒன்றிய செயலாளர் பதவி பறிப்பு… முதல்வர் அதிரடி நடவடிக்கை…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share