தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை மேற்கு ஆசியாவில் குறிப்பாக அமெரிக்கா-ஈரான் மோதல் தொடர்பான போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிவாயு விநியோக சங்கிலி பாதிப்பால் உருவாகியுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட பல துறைகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
சில இடங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சம் பரவத் தொடங்கியுள்ளது.இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கேஸ் சப்ளை செய்யும் நிறுவனங்களும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தம்மிடம் கையிருப்பில் உள்ள வணிக மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கான எண்ணிக்கை, அதனைக் கொண்டு எவ்வளவு நாளைக்கு விநியோகிக்க முடியும் உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... திமுக தேர்தல் அறிக்கைக் குழு தீவிர ஆலோசனை...!
இதனிடையே, அந்த அறிக்கையின் அடிப்படையில் இன்றைய தினம் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். அது மட்டுமல்ல ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு முறை பிரதமர் மோடிக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. உடனடியாக வணிக ரீதியாகவும் அதேபோல மின்சார தட்டுப்பாடு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காகவும் உடன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. இது தொடர்பாகவும் இன்றைய தினம் ஆய்வுக்கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விறுவிறு அரசியல் களம்... நீடிக்கும் இழுபறி..! மார்ச் 16ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை...!!