×
 

கூட்டணியை விட்டு விலகும் காங்கிரஸ்? என்ன செய்யலாம்... முதல்வர் அவசர ஆலோசனை..!!

காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் சில பிளவுகள் தென்படுவதால், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் மாற்று வழியை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல்கள் முதலில் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் என்ற அளவில்தான் இருந்தன. ஆனால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் போன்ற முக்கிய தலைவர்கள் பேசிய விதம் இதை மேலும் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

திமுக 25 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாகவும், காங்கிரஸ் 35 முதல் 39 தொகுதிகள் வரை கோரி வருவதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த இழுபறி காரணமாகத்தான் மாற்று வாய்ப்புகளை காங்கிரஸ் ஆராய்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தவெக தரப்பில் இருந்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான செல்வாக்கு மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்களின் ஈர்ப்பு ஆகியவை இளைஞர்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.

தவெக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் திமுகவுடன் கூட்டணி என்று தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்ச ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆந்திரா வெடிவிபத்து... பாதுகாப்பு குறைபாடுதான்... கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் ஏற்படும் பாதகங்கள், காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தால் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகும் என தகவல்கள் பரவும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share