×
 

காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி தமிழக அரசியலில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மிக முக்கியமான அம்சமாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியின் வேர்கள் 2004-ஆம் ஆண்டு தொடங்குகின்றன. கடந்த பல தேர்தல்களை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்தித்து வெற்றியை குவித்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இணைந்து சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து முடிந்துள்ளது. டி.ஆர் பாலு தலைமையிலான திமுக குழுவினருடன் கிரீஸ் ஜூடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப் பெருந்தகை, கிரிஷ் ஜோடங்கர் ஆகியோர் சென்றனர். 

இந்த நிலையில், ஒரு மணி நேரமாக நடைபெற்ற திமுக - காங்கிரஸ் கட்சி இடையிலான முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி? நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்?! அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் வேணுகோபால்!!

திமுகவுடன் தொகுதி பங்கேடு பேச்சுவார்த்தைக்கு பிறகு இவ்வாறு கூறினார். திமுக - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி என்றும் உறுதியான கூட்டணி எனவும் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுகவை தவிர வேறு யாருடனும் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தவில்லை என்றும் கூட்டணிப் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share