என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!
மகளிர் உரிமைத் தொகையில் என்ன சீரமைப்பு செய்யப் போகிறீர்கள் என்று முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தவெகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் நலனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார். அரசு ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தில் விலக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த வாக்குறுதி பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதிதாக தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்று இருக்கும் நிலையில் மறு சீரமைப்பு செய்து திட்டத்தை மாற்றுவதற்குள் ஏற்கனவே கொடுத்து வந்த ஆயிரம் ரூபாயை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!
இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். மாதம் 2500 ரூபாய் என்று சொல்லிவிட்டு 1000 ரூபாய் கூட தராமல் இழுத்தடிப்பது தான் உங்கள் மாற்றமா என்ற கேள்வி எழுப்பினார். மே மாதத்திற்கான கலைஞர் உரிமை தொகையை 15 ஆம் தேதியை வரவு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க என்று முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஏற்கனவே உள்ள திட்டத்தை தொடர இப்ப எதுக்கு அவகாசம் என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!