ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஆணவம் அழிவுக்கு வழி என்று கூறியுள்ளார். முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் வைத்து அதிரடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் ஆத்தூரில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் கேள்வி எழுப்பினார். சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்றும் கடுமையாக சாடினார். ஆணவம் அழிவிற்கு வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!