×
 

சட்டத்தின் ஆட்சியா.? சாத்தானின் ஆட்சியா.? மார்க்கண்டேயன் கைது சம்பவத்தை கண்டித்த ஸ்டாலின்..!!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், த.வெ.க. ஆட்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி செயல்படும் ஆட்சியாக த.வெ.க. அரசு மாறியிருப்பதாகவும், அரசியல் விமர்சனங்களுக்காக எதிர்க்கட்சியினரை வேட்டையாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒரு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது த.வெ.க. அரசு. இது Take Diversion Model ஆட்சியாக செயல்படுகிறது” என்றார்.மேலும், “அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என நீதிமன்றத்திடம் சமீபத்தில் குட்டு வாங்கியதை நினைவூட்டிய ஸ்டாலின், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.“கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது சாத்தானின் ஆட்சியா எனக் கேள்வி எழுப்பிய அவர், “மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு கூட நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?” என்று வினவினார்.

இதையும் படிங்க: தமிழ்த் தாயின் ஏக்கம் தீர்த்த தலைமகன்..! திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து..!!

இறுதியாக, ஆட்சியாளர்களின் சட்டத்துக்கு புறம்பான உத்தரவுகளை நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences” என்று எச்சரித்தார். 

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share