தமிழ்த் தாயின் ஏக்கம் தீர்த்த தலைமகன்..! திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து..!!
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இன்று தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கு வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது தமிழ் மண்ணின் அடையாளத்தையும், மொழியின் பெருமையையும், நீண்டகால போராட்டத்தின் வெற்றியையும் நினைவூட்டும் முக்கியமான தினம். பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்று தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற நாளாகும். இந்த நாளை 2022ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறோம்.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, 1956 நவம்பர் 1ஆம் தேதி மெட்ராஸ் மாகாணம் (Madras State) உருவானது. இந்த மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்தனர். மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால் தமிழ் பேசும் பகுதிகளைத் தக்கவைக்க போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நாளை (நவம்பர் 1) சிலர் தமிழ்நாடு தினமாகக் கொண்டாட விரும்பினாலும், அது தமிழ்நாட்டின் எல்லை இழப்பை நினைவூட்டுவதாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள் என்று கூறினார். தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!