×
 

பிப்.23 முதல் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை...! இதையெல்லாம் செய்யுங்க...முதல்வர் ஸ்டாலின் ஆணை..!

பிப்ரவரி 23ஆம் தேதி முதல் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய அங்கமாக, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற பெயரில் சிறப்பு மகளிர் பரப்புரை திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கி, மார்ச் 8-ஆம் தேதி வரை தொடரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பரப்புரையின் முக்கிய நோக்கம், திராவிட மாடல் அரசு பெண்களுக்காக செயல்படுத்தியுள்ள பல்வேறு சாதனைத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று மகளிரிடம் எடுத்துரைப்பதாகும். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், இலவச பேருந்து பயணம், பெண்கள் தொழில் முனைவோர் திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான சாதனைகளை முன்னிலைப்படுத்தி, பெண்களின் ஆதரவை திரட்டுவது இதன் இலக்கு.

சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி, 1.31 கோடி பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகையை முன்கூட்டியே மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக சேர்த்து மொத்தம் ரூ.5,000 ஒரே தவணையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அடுத்த ஆட்சியில் திராவிட மாடல் 2.0- வில் இத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!

இந்த நிதி உதவி மற்றும் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இப்பரப்புரை அமைந்துள்ளது. திமுக மகளிரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் பூத் அளவிலான பரப்புரை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பூத்திலும் 10 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் வழியாக அரசின் சாதனைகள், ஆளுமை மாடல், மத்திய அரசின் புறக்கணிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் போன்றவை விளக்கப்படுகின்றன. வீடு வீடாகச் சென்று பேச்சு, துண்டு அறிக்கைகள் வழங்குதல், சிறு கூட்டங்கள் நடத்துதல் போன்றவை இதில் அடங்கும்.

இதையும் படிங்க: உள்ளாட்சி உரிமைகளை பறித்த ஸ்டாலின் சுயாட்சி பற்றி பேசுறாரு..! பொளந்து கட்டிய தமிழிசை ..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share