ரூ.167 கோடியில் நவீன மயமாகும் மந்தவெளி பேருந்து முனையம்... பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..!
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, சென்னை மாநகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.
இத்திட்டத்திற்கு மொத்தம் 167 கோடியே 9 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மந்தைவெளி பகுதியில் உள்ள தற்போதைய பேருந்து பணிமனை மற்றும் முனையத்தை முழுமையாக மாற்றி, நவீனமான ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய வளாகமாக உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு மெட்ரோ, பேருந்து மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி உருவாகும்.
இந்த வளாகத்தில் வணிகக் கட்டிடங்கள், அலுவலக இடங்கள், ஷாப்பிங் வசதிகள் மற்றும் பிற வர்த்தக அம்சங்கள் இடம்பெற உள்ளன. பேருந்து முனையத்தை நவீனப்படுத்தும் பணிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலை பாலம் திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அள்ளாடும் மீனவ சமூகம்..! சீர்குலைக்கும் கைது..! சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!
கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கால்நடைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 16.88 கோடி ரூபாயில் காண 12 கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 126 இளநிலை உதவியாளர் மற்றும் 96 தட்டச்சர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். கால்நடை மருத்துவமனை மற்றும் நான்கு கால்நடை மருந்தகங்கள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பதிவு துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ் புதிய சேவைகளை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுகவில் ஐக்கியம்... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்..!