×
 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... நான் வரேன்..! உற்சாகத்தை வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கிராமிய வாழ்வில் ஆழமாக வேரூன்றிய ஒரு தொன்மையான பாரம்பரியம் தான் ஜல்லிக்கட்டு. இது வெறும் விளையாட்டு அல்ல. தமிழர்களின் வீரத்தை, கலாச்சார அடையாளத்தை உலகறியச் செய்யும் ஒரு கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இந்த வீர விளையாட்டு, பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாக, மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம். காளையின் திமிலைத் தழுவி அடக்கும் இளைஞர்களின் துணிச்சல், அச்சமற்ற தன்மை ஆகியவை தமிழ் மண்ணின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.

பொங்கல் கொண்டாட்டங்களுடன் இணைந்த ஜல்லிக்கட்டு, அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடுகளை போற்றும் ஒரு விழாவாக உருவெடுத்தது. விவசாய வாழ்வில் மாடுகள் முக்கிய பங்கு வகித்ததால், அவற்றின் வலிமையைப் பெருமைப்படுத்தும் விதமாக இது நடத்தப்பட்டது. இன்றும் இந்த இனங்கள் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டின் பெருமை அதன் கலாச்சார முக்கியத்துவத்தில் உள்ளது.

இது தமிழர்களின் அடையாளமாக, தமிழ் பெருமையாக விளங்குகிறது. கிராமிய சமூகத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் நடக்கும் போட்டிகள் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றன. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக முதல்வர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போராடிய இடைநிலை ஆசிரியர்கள் கைது..! நாங்க என்ன கொலையா பண்ணோம்? கொந்தளித்த ஆசிரியர்கள்...!

திராவிட முன்னேற்ற கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள் என்று அறிவுறுத்தினார். நாளை 2026 ஆம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், 17 ஆம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: H. ராஜா அதிரடி கைது..! இதுதான் காரணம்... அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share