போராடிய இடைநிலை ஆசிரியர்கள் கைது..! நாங்க என்ன கொலையா பண்ணோம்? கொந்தளித்த ஆசிரியர்கள்...!
19 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். 19வது நாளாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றும் தங்களது போராட்டத்தை தொடர இருக்கின்றனர். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
போராடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்தது. இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் 19வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனர்.
இதையும் படிங்க: சிறு தீங்கு நிகழ்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு... ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கைதுக்கு EPS கண்டனம்...!
அப்போது, நாங்கள் என்ன கொலையாளிகளா எங்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸாருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரையில் அமர்ந்து போராடிய ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கண்டனம் முழக்கங்களை ஆசிரியர்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: நாங்க என்ன தீவிரவாதியா? சாப்பிட விட மாட்டீங்களா? அராஜகம்… இடைநிலை ஆசிரியர்கள் கொந்தளிப்பு..!