நல்ல வேளை சோறு போட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்க அன்று ஆளில்லை! முதல்வர் சாடல்..!
சோறு போட பள்ளி என ஹோட்டலா என கேட்பவர்கள் அன்று இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் காமராஜர். இந்திய அரசியலில் எளிமை, நேர்மை மற்றும் மக்கள் பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய காமராஜரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 அன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாள், தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாள்- ஆகவும் அனுசரிக்கப்படுகிறது. இது அவரது கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் அமைகிறது.
காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான விருதுப்பட்டியில் பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையார். எளிய குடும்பத்தில் பிறந்த காமராஜர், பள்ளிப்படிப்பை முடிக்க முடியாமல் இளவயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறினார். ஆனால், அவரது ஆர்வமும், உறுதியும் அவரை அரசியல் மற்றும் சமூக சேவையில் முன்னேற வைத்தன. இளவயதில் காமராஜர் இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களில் பங்கேற்றார். இவரது எளிமையான பேச்சு மற்றும் மக்களுடன் நேரடியாகப் பழகும் திறன் அவரை மக்கள் தலைவராக உயர்த்தியது. காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார். இவரது ஆட்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. அவரது ஆட்சியில் கல்வி, உள்கட்டமைப்பு, மற்றும் சமூக நலத் திட்டங்களில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கிராமப்புறங்களில். மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அவரது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று.
இந்த நிலையில், காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல என்றும் நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் எனவும் கூறினார். நல்லவேளை, பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்., சோறு போட அது என்ன ஹோட்டலா என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் அன்று இல்லை அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று என்று கூறினார். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பார்லிமென்டில் கால் பதிக்கும் கமல்.. பதவியேற்பு தேதியை உறுதி செய்த மநீம..!
இதையும் படிங்க: செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி..!