×
 

புயல் எச்சரிக்கை... என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை...!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறார். மலாக்கா ஜலசந்தி அருகே நேற்று மதியத்திற்குள் சென்யார் புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவிய வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில இந்த புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், மலாக்கா ஜலசந்தி, தெற்கு அந்த மானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்யார் புயல் நேற்று காலை 5:30 மணி அளவில் உருவாகி இருப்பதாக தெரிவித்தது. 

வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்த நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் அது புயலாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'டிட்வா' என பெயர் சூட்டப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தை பொறுத்த வரையில் அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி... இதையெல்லாம் செய்யணும் பா.! உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

இதனிடையே, தமிழகத்தில் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகன மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்ச ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். 

இதையும் படிங்க: V.P. சிங் போன்ற பிரதமரை மிஸ் பண்றோம்... முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share