×
 

"நீரா" வாக்குறுதியும் கானல் நீரா? என்ன முதல்வரே... வெளுத்து வாங்கிய நயினார்...!

நீரா இறக்கி விற்பனை செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றி வருவதாக ஆட்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். திராவிட மாடல் அரசு திறம்பட செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவிக்கின்றனர். இருப்பினும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்.

வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில், தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 'நீரா' இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி எண் 62-இல் சொன்னீங்களே, செஞ்சீங்களா என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தண்ணீர் வறட்சியாலும் வெள்ளை ஈ தாக்குதலாலும் வாடல் நோயாலும் தமிழகத் தென்னை விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், திமுக அரசோ தென்னை விவசாயத்தைக் காப்பாற்ற போதிய நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை, முறையான இழப்பீடும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும்,bரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விநியோகித்து தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கக் கூட முன்வரவில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடடே..! ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... அகவிலைப்படி உயர்வு...! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்...!

இது போதாததற்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, நீரா பானம் போன்ற மதிப்புக் கூட்டல் நடவடிக்கைகள், கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் ஆகியவற்றைக் கிடப்பில் போட்டு வயிற்றில் அடிக்கும் திமுக அரசைக் கூடிய விரைவில் விவசாயப் பெருமக்கள் விரட்டியடிப்பர் என்பது நிச்சயம் என்றும் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை... இத செஞ்சே ஆகணும்! திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share