வாயை திறந்தாலே பொய்.. இவருக்கு இதே வேலை தான்! முக்கிய புள்ளியை சாடிய முதல்வர்..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொய்யை மட்டுமே கூறி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
5 நாள் பயணமாக உதகைக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி செய்தார். அப்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சொன்னது போல் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம் என கூறினார். உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுபவர் என 2019 தேர்தலின் போது வாக்குறுதியாகவே சொன்னேன் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுபவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார் என குற்றம்சாட்டிய முதலமைச்சர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என கூறினார். அமித்ஷாவை எதற்காக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும் என பேசிய முதலமைச்சர், ஆனால், தான் சொல்லித்தான் மெட்ரோ, 100 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார் என்றும், இந்த மாதிரி பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் அவரின் வேலையாக இருக்கிறது எனவும் இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் கூறினார். ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக திமுக நடத்திய பேரணி குறித்து செல்லூர் ராஜூ கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், செல்லூர் ராஜு ஒரு கோமாளி அவர் பேசியதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம் இது..! இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!