×
 

தூய்மை பணியாளர்களுக்கு உணவு..! விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊதிய உயர்வு, நிரந்தர பணி மற்றும் தூய்மை பணியினை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராடி வந்தனர். அவர்கள் அங்கிருந்து நீதிமன்ற உத்தரவுபடி அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது.

அதில் முக்கியமானது தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டம். அதன்படி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிக்குளம் ஊராட்சி அத்திகுளம் கிராமத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்ச ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை உட்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உழைப்புக்கு அங்கீகாரம்..! கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு...! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், வெப்பம் தாங்கும் பைகளில் வைக்கப்பட்ட கலன்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் ஊதிய உயர்வு, நிரந்தர பணி மற்றும் தனியார் மயமாக்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் நிரந்தரப் பணி தரவேண்டும் என்று வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் அவ்வப்போது போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கழிவு அள்ளுற உள்ளங்களுக்கு கொடுக்கிற நன்றி கடனா இது? தரமற்ற உணவு..! நயினார் கொந்தளிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share