×
 

எந்த ஷா வந்தால் என்ன? கருப்பு சிவப்பு படை பாடம் புகட்டும்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!

எந்த ஷா வந்தால் என்ன.., கருப்பு சிவப்பு படை பாடம் புகட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், டெல்லியின் செல்வாக்குக்கு எதிரான ஒரு வலுவான குரல் எழுந்து கொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அவரது கூட்டணி உத்திகளுக்கு எதிராக, "எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது" என்ற உறுதியான பேச்சை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.

இது வெறும் ஒரு அரசியல் டயலாக் அல்ல. தமிழ்நாட்டின் தனித்தன்மை, திராவிட மாதிரி ஆட்சி மற்றும் டெல்லியின் கட்டுப்பாட்டுக்கு எதிரான நீண்டகால போராட்டத்தின் சின்னமாகும். 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி இந்தக் குரல் அதிக வலுவடைந்துள்ளது, ஏனெனில் அமித் ஷாவின் சமீபத்திய கூட்டணி அறிவிப்புகளும், டெல்லியின் மையப்படுத்தல் கொள்கைகளும் தமிழகத்தின் சுயாட்சியை சவால் செய்கின்றன.ஸ்டாலினின் இந்தப் பேச்சு, ஏப்ரல் 18 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் தொடங்கியது. அமித் ஷா, 2026-ல் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக ஸ்டாலின், "அமித் ஷா அல்ல, எந்த ஷாவாக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று கூறினார்.

என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கி உள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் பரப்புரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து எந்த ஷா வந்தாலென்ன.. எத்தனை திட்டம் போட்டாலென்ன என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குல என்ன பயம்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறீங்க? இபிஎஸ் சரமாரி கேள்வி…!

டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மக்களே தயாரா?... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000... பொங்கல் பரிசை அள்ளித் தர காத்திருக்கும் தமிழக அரசு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share