மக்கள் கிட்ட கனிவா.. கவனமா நடந்துக்கோங்க! காவலர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு முதல்வர் அதிமுக்கிய அறிவுறுத்தல்..!
தமிழ்நாடு காவலர் பயிற்சியை நிறைவு செய்த அனைவருக்கும் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ஊனமாஞ்சேரி பயிற்சிகத்தில் தமிழ்நாடு காவலர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நிறைவு அணிவகுப்பு விழாவில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். விழாவின் நாயகர்களே உயர் அதிகாரிகள் என்று தெரிவித்தார். ஓராண்டு சிறப்பான பயிற்சி முடித்து மனம், உடல் உறுதி கொண்டவர்களாக களத்திற்கு காவலர்கள் செல்வதாக தெரிவித்தார். 9 பெண் அதிகாரிகள் உள்ளிட்ட 24 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு பெற்றுள்ளதாகவும் பயிற்சி முடித்த காவலர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்று வாழ்த்தினார்.
எல்லா வகையான பயிற்சிகளையும் பெற்று, அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் திறன் கொண்டு களத்திற்கு செல்வது பெருமைமிகு தருணம் என கூறினார். இந்த காவல் உயர் பயிற்சிகள் இதுவரை 5,555 நேரடி உதவி ஆய்வாளர்களுக்கும் 297 காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் அடிப்படையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் 2,410 காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி முடித்து காவல் பணியில் சேர்ந்து உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
காவல் பணி என்பது மக்கள் பிரச்சினைகளை நேரடியாக தீர்த்து வைக்கக்கூடிய உன்னதமான பணி என்றும் ஒவ்வொருவரும் பொதுமக்களிடம் கனிவாக மரியாதையாக நடந்து, அவர்களுடைய குறைகளை பொறுமையாக கேட்க வேண்டும் என்றும் நியாயமான நேர்மையான சேவையை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் என்ன சொல்றாங்க? மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை..!
காவல்துறையில் சிறப்பாக நேர்மையாக பணியாற்றி மென்மேலும் பதவி உயர்வுகள் பெற்று மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்தி உள்ளார். மீண்டும் உங்களை சந்திக்கும் போது நீங்கள் களத்திற்கு செல்லும் போது, நீங்கள் கொடுத்த ஆலோசனைகளின் பேரில் சிறப்பாக மக்கள் பணியாற்றுகிறோம் நீங்கள் ஒவ்வொருவரும் சொன்னால் அதுவே எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி என்றார். தமிழ்நாட்டு மக்களுக்கு துணையாகவும் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் நீங்கள் அனைவரும் திட்டமிட்ட செயல்பட வேண்டும் என்று வாழ்த்தினார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சர்ப்ரைஸ்..! முதல்வர் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்..!