மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சர்ப்ரைஸ்..! முதல்வர் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்..!
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை சென்றார். 48. 17 கோடி செலவிலான 47 முடிவுற்ற பணிகளை அவர் திறந்து வைத்தார். மேலும் 271 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து, 54 ஆயிரத்து 461 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தற்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். எந்த ஒரு மாவட்டத்திற்கு சென்றாலும் அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் திட்டப்பணிகளையும் அதற்காக ஒதுக்கப்படும் தொகை உள்ளிட்டவற்றையும் அமைச்சர் அறிவிப்பது வழக்கம் அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ள உள்ள திட்ட பணிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
மயிலாடுதுறையில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் நீடூர் ஊராட்சியில் 85 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார். குற்றாலம் வாய்க்கால் ஏழு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், வெள்ளகோவில் கிராமங்களில் 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். மேலும், பூம்புகார் மேம்படு துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் சீர்காழியில் புதிய நகராட்சி அலுவலகம் 5 கோடி ரூபாயில் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், தரங்கம்பாடி-ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். சீர்காழி, திருமுல்லைவாயல் பகுதிகளில் மேற்கூரை நீட்டிப்பு, தூர்வாரும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். சீர்காழி நகராட்சியில் தேர் வீதிகளில் ரூ.8 கோடி மதிப்பில் வடிகால் வசதி மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஓரணியில் இருந்தா எந்த டெல்லி அணி கனவும் பலிக்காது..! CM ஸ்டாலின் ஃபயர் ஸ்பீச்..!
இதையும் படிங்க: முதல்வர் இன்று மயிலாடுதுறை பயணம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?