#BREAKING: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை… மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..! செம்ம குஷி..!
சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது வெறும் ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வீரத்தையும், மரபையும், பண்பாட்டு அடையாளத்தையும் ஒருங்கே தாங்கி நிற்கும் ஒரு உயிரோட்டமான திருவிழா. மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் என்ற சிறிய கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் இந்தப் போட்டி, இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க காளையர்கள் களமிறங்கினர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அலங்காநல்லூருக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்த முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் கால்நடை பராமரிப்பு துறையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.! களைகட்டிய நிகழ்ச்சி..! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அலங்காநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெரும் வீரருக்கு அரசு பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழக விவசாய சங்கத்தினர் கைது... கொடுமையின் உச்சம்...! சீமான் கண்டனம்..!