×
 

தமிழக விவசாய சங்கத்தினர் கைது... கொடுமையின் உச்சம்...! சீமான் கண்டனம்..!

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை கொடுங்கோன்மையின் உச்சம் என சீமான் தெரிவித்துள்ளார்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதற்காக தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு நள்ளிரவில் கைது செய்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத பெரும் கொடுமையாக அருள் ஆறுமுகம் உள்ளிட்ட ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து துன்புறுத்திய திமுக அரசு, கடும் எதிர்ப்பிற்கு அஞ்சி 6 பேர் மீதான குண்டர் சட்டத்தைத் திரும்பப்பெற்ற போதும், அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் திரும்பப்பெற மறுத்தது என்று குறிப்பிட்டார். 

கடந்த டிசம்பர் மாதம் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீது பொய் வழக்கு புனைந்து மீண்டும் கைது செய்து திமுக அரசு சிறையில் அடைத்தது என்றும் மேல்மா, பரந்தூர், ஓசூர், மதுரை, கடலூர், கோவை என எங்கெல்லாம் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை காக்கவும் வாழ்வாதார உரிமைக்காகவும் போராடுகின்றனரோ அவர்களை எல்லாம் சிறிதும் மனசாட்சி இல்லாமல் குற்றவாளிகள் போல கைது செய்து சிறையில் அடைப்பது வாடிக்கையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.  

இதையும் படிங்க: போகிப் பண்டிகை.. திராவிட குப்பையை எரித்து போகி கொண்டாடுங்க... விளாசிய சீமான்...!

இந்த நாட்டில் உள்ள மதிப்புமிக்க தலைவர்களையும், அவர்கள் வீட்டு பெண்களையும் தரக்குறைவாக விமர்சிக்கும் திமுகவின் வாடகை வாய்களாக செயல்படும் வலையொளியாளர்களை வழக்கு பதிந்து கைது செய்யவில்லை என்று கூறினார். கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 விவசாயிகள் மீதான வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற்று, அவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: அண்ணாமலை தனி ஆளில்ல!! தமிழ் தேசியத்தின் மகன்!! தாக்கரே சகோதரர்கள் மிரட்டலுக்கு சீமான் பதிலடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share