NDA சுயநலக் கூட்டணி..! துரோக கூட்டணி..! முதல்வர் ஸ்டாலின் சரமாரி விளாசல்..!
முழுக்க முழுக்க துரோகத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி என் டி ஏ கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னையில் இரண்டு நாள் கருத்தரங்கை முதலமைச்சர். ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் சமூக நீதி, சமத்துவம், மக்கள் நலன் ஆகியவற்றை திமுக அரசு முக்கியமாக பார்க்கிறது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் நாட்டிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது திராவிடம் மாடல் ஆட்சி எனவும் தெரிவித்தார். இந்தியாவில் யாரும் அடைய முடியாத 11.8% வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது என்றும் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு காலையில் சத்தான சுவையான உணவு வழங்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் மூன்றாம் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன என்று தெரிவித்தார். மத்திய அரசின் நெருக்கடிகளை தாண்டி திட்டங்களை நிறைவேற்றி வருவதாக கூறிய முதலமைச்ச ஸ்டாலின், திமுக வெற்றி பெற்ற மறுநாளே விடியல் பயணத்தை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.
மேலும் சமூகத்தில் எந்த பிரிவினரும் விடுபட்டு விடக்கூடாது என பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார். இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், இதயம் காப்போம், ஊட்டச்சத்தை உறுதி செய்வோம், கலைஞர் கனவு இல்லம், தோழி விடுதி, வடசென்னை வளர்ச்சி திட்டம் என தமிழக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
இதையும் படிங்க: பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் அதிமுக..! சரியான பாடம் காத்திருக்கு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!
சொன்னதைப் போலவே மகளிர் உரிமை திட்டத்தை நிறைவேற்றி இருப்பதாகவும் தேவைகளுக்கு ஏற்ப தங்களது கொள்கைகளும் மெருகேறி கொண்டிருப்பதாகவும் கூறினார். கட்டாயத்தில் அமைக்கப்பட்ட nda கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது என்றும் அது துரோக கூட்டணி எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். வழக்குகளால் மிரட்டப்பட்டு முழுக்க முழுக்க சுயநலத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி பாஜக கூட்டணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு விடிவெள்ளி... ரெண்டு மாசம் தான் திமுகவுக்கு டைம்..! அன்புமணி அதிரடி..!