×
 

பகுதி நேர ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! சட்டசபையில் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் 5 ஆம் நாள் கூட்டம் இன்று நடந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். புதிய முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் 1088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஓய்வூதியம் 3400 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாதனைக்கு மேல் சாதனை..! 2.0 திராவிட மாடல் அசரவைக்கும்..! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அரசு பள்ளிகள் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்க ஏதுவாக, ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் அவர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தார். 

இதையும் படிங்க: மத்திய அரசு தமிழகத்திற்கு இழைத்த துரோகங்கள்... லிஸ்ட் போட்ட DMK..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share