கரூர் சம்பவம்... உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!
கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் கூறினார்.
ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 6 மாதகால இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கூடியது.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக வெற்றிக்கழகமும் அதிமுகவும் கூட்டணி அமைத்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் இன்று அதிமுகவின திட்டமிட்டு வந்துள்ளதாக கூறினார். தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர் குரல் அதிமுகவிடம் இருந்து வருமா என தெரியவில்லை என தெரிவித்தார். அதிமுக எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் பயன் தராது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி... எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி... உண்மையை மறைக்க பாக்குறாங்க! இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!
கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசுவதாகவும், மெகா கூட்டணி, மகா கூட்டணி எல்லாம் சொல்கின்றனர் ஆனால் எதிலும் பலன் இல்லை என தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகத்தை சார்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பது வருத்தம் அளிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சிபிஐக்கு மாறிய கரூர் வழக்கு... மீண்டும் நீதிமன்ற காவல்? தவெக நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர்...!