×
 

தமிழ்நாடு ஓரணியில் இருந்தா எந்த டெல்லி அணி கனவும் பலிக்காது..! CM ஸ்டாலின் ஃபயர் ஸ்பீச்..!

ஓரணியில் தமிழ்நாடு இருந்தால் எந்த டெல்லி அணியின் காவித்திட்டமும் பலிக்காது என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள லால் புரத்தில் ஐயா. எல். இளைய பெருமாள் திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, இளையபெருமாள் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர் இளையபெருமாள் என புகழாரம் சூட்டினார். மேலும், வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது எனவும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கம் இளையபெருமாளின் திருவுருவச் சிலையை திறந்து வைப்பதில் பெருமை என்றும் இளையபெருமானின் போராட்டம் ஆதிதிராவிட மக்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தது என்றும் தெரிவித்தார். காமராஜர் பிறந்த நாளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாக கூறினார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழக முழுவதும் ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தி தீர்வு கண்டோம் என்றும் 2021 இல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பு மூலம் மக்களிடம் பெற்ற மனுவுக்கு 100 நாட்களில் தீர்வு என உறுதி தந்ததாகவும் கூறினார்.

சொன்னதைப் போல் தீர்வு தந்ததால் மேலும் பலர் மனுக்களை அளிக்க தொடங்கியதால் முதல்வரின் முகவரி என தனித்துறையை உருவாக்கப்பட்டதாக கூறினார். தற்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் முகாம்கள் நடக்க உள்ளதாகவும் முகாம்களில் மனு அளிப்பவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமைகளை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அரசியல் சேவையை வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இலக்கு என்றும் முகங்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் சிதம்பரத்தின் சீர்திருத்த பிள்ளை என புகழ்ந்து பேசினார். ஓரணியில் தமிழ்நாடு இருந்தால் எந்த டெல்லி அணியின் காவித்திட்டமும் பலிக்காது என்றார். மேலும் திமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் செல்வப் பெருந்தகை, கே எஸ் அழகிரி, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முதல்வர் இன்று மயிலாடுதுறை பயணம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

இதையும் படிங்க: ஊர் சேர்ந்தா தான் தேர் இழுக்க முடியும்! ஒற்றுமையோடு செயல்பட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share