×
 

மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கினார். 

அதிகனமழை மற்றும் புயலை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாவட்டங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஷாக் அடிக்க போகுதா மின் கட்டணம்.? ஜூலை முதல் கட்டணம் உயர்வு..? திமுக அரசை வறுத்தெடுக்கும் ராமதாஸ்.!!

மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், அவசரகால மீட்பு வாகனங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதுடன், உணவு உள்ளிட்டவையும் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இயற்கை பேரிடர்களின் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு உள்ளது எனவும் கூறினார். 

இதையும் படிங்க: சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share