×
 

தமிழ்நாட்டுக்கே பெருமை... ஐ.நா. விருது பெற்ற சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...!

ஐ.நா விருது பெற்றுள்ள சுப்ரியா சாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டின் டிசம்பர் 10-ஆம் தேதி, கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (UNEP) ஏழாவது சுற்றுச்சூழல் சபை (UNEA-7) கூட்டத்தின் பக்கவாட்டில், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு, உலகின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்த விருது, காலநிலை மாற்றம், உயிரியல் பன்முகத்தன்மை இழப்பு மற்றும் மாசுபாடு போன்ற மூன்று கிரக சவால்களை எதிர்கொள்ளும் தனிப்பட்ட முயற்சிகளை அங்கீகரிக்கிறது. சுப்ரியா சாகு, இன்ஸ்பைரேஷன் அண்ட் ஆக்ஷன் வகையில் இந்த மரியாதையைப் பெற்றுள்ளார். அவரது தமிழ்நாட்டில் மேற்கொண்ட பசுமைத் திட்டங்கள், உலகளாவிய அளவில் காலநிலைத் தகவமைப்பை மாற்றியமைக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

சுப்ரியா சாகு ஐ.நா. விருது பெற்றதற்கு தமிழ்நாடு பெருமை கொள்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக @UNEP அமைப்பின் Champions Of The Earth விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “கோபாலபுரத்து அழகேசா... நீ ஆண்டது போதும்... வீட்டுக்குப் போ” - முதல்வர் மு.க.ஸ்டாலினை பாட்டு பாடி பங்கமாய் கலாய்த்த ஜெயக்குமார்...! 

ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெறிநாய்க்கடி மையமாக மாறிய மதுரை... இது தான் அறிவாலய அரசியல்..! நயினார் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share