×
 

ஓட்டு தான் முக்கியம்ல... மக்களுக்கு உதவி பண்ணாம 3000 பேரை கூட்டி கூட்டம்!.. நியாயமா முதல்வரே? விளாசிய தமிழசை...!

மகாபலிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வாக்குச்சாவடி கூட்டத்தை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம் எல் ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மழைக்காலம் என்பதால் மக்களுக்கு பெருமளவு உதவி தேவைப்படும் என்பது கூட அறியாமல், இது போன்ற கூட்டத்தை கூட்டுவது நியாயமா என முதலமைச்சருக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

 அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மழைக்காலம் என்பதால் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கக்கூடாது என்று சொல்லும் நீங்கள் ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை என கூறினார். ஆனால் இன்று எல்லா இடங்களிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என தெரிவித்தார். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் உட்பட மூவாயிரம் பேரை வைத்துக் கொண்டு வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் நடத்துகிறீர்கள் என்று. அவர்களை எல்லாம் மக்களுக்கு உதவி செய்ய விடாமல் ஆதரவாக இருக்க விடாமல் மக்கள் பிரதிநிதிகள் உட்பட எல்லோரையும் வைத்து வெற்றி சாவடி கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் இது நியாயமா முதல்வர் அவர்களே என்று கேட்டு உள்ளார்.

இதையும் படிங்க: நெல்மணிகளை காக்க தவறிய திமுக... நீங்க வீட்டுக்கு போறது உறுதி... தவெக தலைவர் விஜய் கண்டனம்...!

ஆக உங்களுக்கு மழையில் நனையும் மக்களை பற்றி கவலை இல்லை நாளை நீங்கள் வாங்கும் வாக்குகள் பற்றி தான் கவலை என்றும் சாடினார். நிச்சயமாக 2026 இல் மக்கள் உங்களை கவலை அடையச் செய்வார்கள் என்றும் தமிழிசை திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு அதனை கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ADMK வை அமித்ஷாவிடம் சரண்டர் செய்த EPS... தப்பு கணக்கு போடுது பாஜக..! முதல்வர் விமர்சனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share