×
 

சொன்னா கேளுங்கய்யா... விஜய் வாகனத்தை துரத்திச் சென்றபோது விபத்து...!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் காரை துரத்திச் சென்றபோது பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஈரோட்டில் நடத்தும் மக்கள் சந்திப்பு முதல் பெரிய பொதுக்கூட்டம். பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் நடந்தது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அதன்பிறகு காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு சந்திப்பும், புதுச்சேரியில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன. இப்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பொதுக்கூட்ட வடிவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார். விஜய் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்கு செல்லும்போது அவரது வாகனத்தை துரத்திச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து வரக்கூடாது என காவல்துறையினர் மற்றும் தமிழக கட்சி கழகமும் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் அதனை கேட்காமல் விஜயின் வாகனத்தை துரத்திச் சென்றதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று ஈரோட்டில் மக்கள் சந்திப்புக்கு விஜய் காரில் சென்ற போது அவரது வாகனத்தை தமிழக வெற்றி கழகத்தினர் துரத்திச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நான் பேசுனா சினிமா டயலாக்காம்… CM சிலப்பதிகாரத்துல இருந்து பேசுனாரா? நக்கலடித்த விஜய்..!

த.வெ.க தலைவர் விஜய்யின் வாகனத்தை பைக்கில் தமிழக வெற்றி கழகத்தினர் விரட்டி வந்துள்ளனர். காவல்துறை மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் அறிவுரையையும் மீறி விஜய் வாகனத்தை விரட்டிச் சென்றன. திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் சென்றபோது தமிழக வெற்றி கழகத்தினர் வந்த பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. முந்திக்கொண்டு செல்ல முயன்ற போது இரண்டு பைக்குகள் மோதி கீழே விழுந்த நிலையில் அவற்றின் மீது அடுத்தடுத்து டூவீலர்கள் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதையும் படிங்க: உங்கள மாதிரி “அப்படி” பேசணுமா? யாரு ஓசி… வாயில் வடை சுடும் திமுகவா நாங்க? கேள்விகளால் துளைத்த விஜய்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share