×
 

பவளவிழா பாப்பா… பாசாங்கு ஆகாது பாப்பா..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட விஜய்…!

திமுக அரசு நடத்தியது அறிவு திருவிழாவா அல்லது அரசியல் திருவிழாவா என விஜய் கேள்வி எழுப்பினார்.

சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா என்றும் அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா எனவும் மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே என்றும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது என்றும் கூறினார்.  அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும் என்று வசைப்பாடி உள்ளார்.

 அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர் என்றும் உண்மையில் அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை என்றும் மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம்., அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம் என்றும் தெரிவித்தார். எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது என்கிற அதிகார மயக்க முழக்கம் எழுப்புவதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வேதாரண்யத்தை வென்றெடுப்போம்..! சொல்லி அடிக்கணும்! நிர்வாகிகளுக்கு முதல்வர் கறார் உத்தரவு..!

அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா என்றும் யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம் என்றும் கேள்வி எழுப்பினார். அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது என்றும் கூறினார். பவளவிழா பாப்பா... நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா., நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா என்றும் கூறி விமர்சித்தார்.

இதையும் படிங்க: நான் வரேன்..! களமிறங்கும் சீமான்..! பல்கலைக்கழக ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share