மனசு கலங்குது... வீரவணக்கம்..! விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!
தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன்ஷ் சியலுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துபாய் ஏர் ஷோ நிகழ்ச்சியில் நிகழ்ந்த தேஜஸ் விமான விபத்தில் விங் கமாண்டர் நமான்ஷ் சயால் உயிரிழந்தார். துபாயின் வானம், பொதுவாக சாகசமும், பிரகாசமும், தொழில்நுட்ப வளர்ச்சியின் சின்னமாகத் திகழும் இடம். ஆனால், நவம்பர் 21, 2025 அன்று, துபாய் ஏர் ஷோவின் இறுதி நாளில், அந்த வானம் திடீரென இருளைக் கவர்ந்தது. இந்திய வான்வலக படையின் பெருமையான உள்ளூர் உற்பத்தி டெஜஸ் போர் விமானம், அதன் சாகசமான காட்சிப்படுத்தலின் போது தரைதளத்தில் மோதி, பெரும் விபத்தை உருவாக்கியது. இந்தப் பேரழிவில், விமானத்தை ஓட்டிய விங் கமாண்டர் நமன்ஷ் சயால் உயிரிழந்தார். 37 வயது இளம் வீரனின் இழப்பு, இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறியது.
விங் கமாண்டர் நமான்ஷ் சயாலின் உடல், கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அஞ்சலி செலுத்தினார்.
நமான்ஷின் மனைவி சென்னையில் உள்ளதால், இன்று மாலை அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. தொடர்ந்து சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் காங்க்ராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதையும் படிங்க: காலையிலேயே பயங்கரம்... டீ குடிக்க நின்ற ஐயப்ப பக்தர்கள் ...சரக்கு வாகனம் மோதி துடிதுடித்து பலி...!
உயிரிழந்த விங் கமாண்டர் நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தமிழக முதலமைச்சரின் ஸ்டாலின் தெரிவித்தார். அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது என்றும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை... தாய் கண்முன்னே அரங்கேறிய சோகம்...!